செவ்வாய், 8 மார்ச், 2011
டெல்லியில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை
டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தவுலா கான் என்ற இடத்தில் இருக்கும் ராம்லால் ஆனந்த் கல்லூரியில், பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வந்த 22 வயதுடைய மாணவி ஒருவரை இன்று காலை கல்லூரி அருகே மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே அவர் இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக