சனி, 16 ஏப்ரல், 2011

குழந்தைகளை சூடு போட்டு சித்ரவதை கோவையில் பயங்கரம்

கோவை கவுண்டம் பாளையம் ஹவுசிங்யூனிட் அம்பேத்கர் நகரை சேர்ந்த வர் ஜெயச்சந்திரன். மனைவி சித்ரா(32). இவர்களுக்கு வர்ஷா(5), ஹரிப்பிரியா(2) ஆகிய மகள்கள் உள்ளனர். 2வது ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்த ஜெயச்சந்திரன், பெண் குழந்தை பிறந்ததால் மனை வியை விட்டு பிரிந்து சென்று விட்டார். கணவர் பிரிந்து சென்றத ற்கு தனக்கு பிறந்த பெண் குழந்தைகளே காரணம் என நினைத்து சித்ரா, அவரது தாய் மீனாட்சி(55) ஆகி யோர், குழந்தைகளை சூடு போட்டு சித்ரவதை செய்த னர். 
கடந்த ஒரு மாதம் முன்பு குழந்தைகளுக்கு சூடுபோட்ட போது அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்த தை தொடர்ந்து, போலீசார் சித்ராவை கைது செய்தனர். இதுபோன்ற செயலில் இனிமேல் ஈடுபட மாட்டேன் என உறுதியளித்ததை தொடர்ந்து அவரை போலீ சார் விடுவித்தனர். நேற்றுமுன்தினம் குழந்தை ஹரிப்பிரியா, அலறி துடித்தது. அக்கம்ப க்கத்தினர் சென்று பார்த்த போது சித்ராவும், அவரது தாயும் குழந்தைக்கு சூடுபோட்டது தெரியவந் தது. அவர்களை கண்டித்த அப்பகுதி மக்கள், உக்கடத்தில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்து க்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று குழந்தைகளை மீட்டனர். அன்பு இல்ல இயக்குனர் சந்தானம் கூறுகையில், “சமீப காலமாக இதுபோன்று குழந்தைகள் மீதான அத்து மீறல் அதிகரித்து வருகிறது. குழந்தைக்கு சூடுபோட்ட தகவல் கிடைத்து நாங்கள் அங்கு சென்றபோது, குழந்தை யின் தாயும், பாட்டியும் வீட்டில் இல்லை. ஆதரவற்ற நிலையில் இருந்த குழந்தை களை மீட்டு வந்தோம்.

0 comments:

கருத்துரையிடுக