செவ்வாய், 19 ஏப்ரல், 2011
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது
3 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்துகிறது. கடந்த டிசம்பர் மாதம் 25 ம் தேதி அன்று, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஆனால் தொழில் நுட்ப கோளாறு காணரமாக அந்த ராக்கெட் பழுதாகி, விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மனம் தளராமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய ராக்கெட்டை உருவாக்கி உள்ளனர்.
பி.எஸ்.எல்.வி.- சி16' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ராக்கெட்டில், `ரிசோர்ஸ் சாட்-2' என்ற `இஸ்ரோ' செயற்கை கோள் உள்பட 3 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 10.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்றே தொடங்கிவிட்டது.

0 comments:
கருத்துரையிடுக