சனி, 23 ஏப்ரல், 2011
பீமா பள்ளி துப்பாக்கி சூடு: மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு.
குற்றப்புலனாய்வு துறையால் கைவிட சிபாரிசு செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான பீமா பள்ளி துப்பாக்கி சூடு வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த ஹக்கீமின் உறவினர் விழிஞ்ஞம் இஸ்ஹாக் தாக்கல் செய்த மனுவில் திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை முதலில் விசாரணை செய்த குற்றப்புலனாய்வு துறை DYSP-க்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2009-ம் ஆண்டு மே 17 தேதி போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:
கருத்துரையிடுக