வெள்ளி, 1 ஏப்ரல், 2011
பத்மனாபபுரம் தொகுதியில் காரில் பணம் பட்டுவாடா தே.மு.தி.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கைது
பத்மனாபபுரம் தொகுதி பறக்கும் படையினர், கட்சியினர் காரில் கொண்டு சென்ற பணம், கொடி, காலண்டர்களை பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர். பத்மனாபபுரம் தொகுதி பறக்கும் படை அதிகாரி அருள்அரசு தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் பூக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தே.மு.தி.க., கொடி கட்டிய காரை நிறுத்தி சோதனை செய்ததில் 36 ஆயிரம் ரூபாய், கொடிகள், நோட்டீஸ், காலண்டர்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்தவர்களை தக்கலை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்து, அவர்களிடம் இருந்து பூத் வாரியாக எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்த லிஸ்டையும் கைபற்றினர். இதனையடுத்து டிரைவர் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த சுரேஷ்(27), தே.மு.தி.க., தக்கலை ஒன்றிய செயலாளர் செல்வின்(37), திருவிதாங்கோடை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் செல்வம்(57) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
0 comments:
கருத்துரையிடுக