வியாழன், 28 ஜூலை, 2011

கூரியர் பார்சலில் பாம்பு

சென்னையில் உள்ள அண்ணாசாலை பகுதியில் ஒரு பிரபல கூரியர் சர்வீஸ் உள்ளது. அந்த கூரியர் சர்வீஸில் வரும் அனைத்து பார்சலையும் பகுதி வாரியாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது கூரியர் சர்வீஸில்  வந்திருந்த கூரியர் பார்சல் ஒன்று வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டி வந்திருந்தது. கூரியர் சர்வீஸில்  வெளிநாட்டிற்கு போகும் பார்சலை ஸ்கேன் செய்வது வழக்கம் உண்டு. அதேபோல் வெளிநாட்டு விலாசத்துடன் இருந்த அந்த பார்சலை ஸ்கேன் செய்த போது உள்ளியர்கள் அதிர்ச்சி அடைந்த. அந்த பார்சலை ஸ்கேன் பண்ணி பார்த்த போது அதில் பாம்பு ஒன்று நெளிந்து இருப்பது தெரிய வந்தது.பாம்புடன் இருந்த அந்த பார்சலை திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சுலோவாக்கியா என்ற நாட்டிற்க்கு அனுப்ப முயன்றதும் தெரிய வந்தது.


பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக சென்னை கிண்டியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பு இருந்த பார்சலை பிரித்து அதில் இருந்து ஒன்றரை நீளமுள்ள சுருட்டை பாம்பை கைப்பற்றினர். இவ்வகை சுருட்டை பாம்பு கொடிய விஷம் உள்ளது என்று பாம்பை கைப்பற்றிய வன ஊழியர் ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த சுருட்டை பாம்பை எதற்காக வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்றார்கள் என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

0 comments:

கருத்துரையிடுக