வியாழன், 13 ஆகஸ்ட், 2009

சார்ஜாவில் இந்தியத் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை


சார்ஜாவில் இந்தியத் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்த விவரம் பின்வருமாறு: இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் ஒப்பந்த அடிப்டையில் சார்ஜாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிறுவனத்தில் பணி எதுவும் இல்லதாதல் ஆட்குறைப்பு செய்து வந்துள்ளது. இதில் இந்திய இளைஞர்கள் 2 பேருக்கும் தற்சமயம் வேலை இல்லையென்றும், சிறிது காலம் கழித்து மீண்டும் பணிக்கு அழைத்துக் கொள்வதாகவும் உறுதி கொடுத்து அவர்களுடைய சொந்த ஊருக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டது. இச்சூழ்நிலையில் அவ்விரு இளைஞர்களில் ஒருவர் திங்கள்கிழமை அவர் தங்கியிருந்த அறையில் கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல் மற்றொரு இளைஞரும் அவர் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த சகதொலிலாளர்கள் போலீஸருக்குத் தகவல் கொடுத்தனர். இருவரின் உடல்களும் தடய அறிவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என போலீஸôர் தெரிவித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக