வியாழன், 13 ஆகஸ்ட், 2009

உயர்கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு ரூ. 6 லட்சம் உதவித் தொகை அளிக்க முஸ்லிம் கல்வி உதவி அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் கல்வி உதவி அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
அறக்கட்டளைத் தலைவர் ஹெச். முகம்மது அலி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாநில வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பங்கேற்று பேசினார்.
இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச் செயலர் ஹிதாயத்துல்லா, செய்யது அப்துல்காதர், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரித் தாளாளர் ஷா, பேராசிரியர் பீர்முகமது, எம்இடி தாளாளர் எக்கீம், காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளர் அப்துல்லா, எஸ்.எம். கபீர், எ. ஜபருல்லா, வர்த்தக சங்க ஆலோசகர் எஸ். யூசுப், முஸ்லிம் கல்வி சங்கத் தலைவர் எஸ். செய்யது முகம்மது, பொறியாளர் ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாண்டு உயர்கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு ரூ. 6 லட்சம் உதவித் தொகை அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

துணைச் செயலர் சலீம் நன்றி கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக