
திங்கள், 31 ஆகஸ்ட், 2009
பீகார் வெள்ளம் : பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு

பீகாரில் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ள நிலையில், சுமார் 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் 11 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பர்ஹி, கன்தாக், பாக்மதி போன்ற பெரிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சுமார் 1000 படகுகளில் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேசிய பேரிடர் உதவிப் படையைச் சேர்ந்த நான்கு குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வெள்ளம் தொடர்பான பல்வேறு விபத்துக்கள் மற்றும் சம்பவங்களில் ஏற்கனவே 29 பேர் பலியாகி இருந்த நிலையில், புர்ணிமா மாவட்டத்தில் 12 பேரும், சீதாமார்ஹி - 4 , ஷாக்ர்ஸா - 3 மற்றும் மதுபானி மற்றும் தர்பங்கா மாவட்டங்களில் தலா 2 பேர் என மொத்தம் 23 பேர் மேலும் பலியாகி இருப்பதாக இன்று கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மாநிலத்தில் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளதாக பீகார் அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Labels:
பிஹார்,
மழை வெள்ளம்
0 comments:
கருத்துரையிடுக