திங்கள், 31 ஆகஸ்ட், 2009

ஆவின் பால் விலை - நாளை முதல் உயர்வு


தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தியதன் தொடர்ச்சியாக ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அது நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, பசும்பால் ( 500 மி.லி) ரூ.11, நிலைப்படுத்திய பால் ( 500 ) ரூ.11.50, பிரீமியம் பால் (500) ரூ.12.50, தயிர் (250 கிராம்) ரூ.7, மோர் (200 மி) ரூ.3.50 என விலை உயர்வு அமலாகும்.

மாதாந்திர பால் அட்டைக்கான வித்தியாசத் தொகையையும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றை நுகர்வோர்கள் சிரமமின்றி செலுத்த ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகார் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்க நுகர்வோர் நலன் மற்றும் சேவை பிரிவை 1800-425-3300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக