புதன், 19 ஆகஸ்ட், 2009

யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ்- உருவம்

‘யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடய(ம் போல்) வட்ட)மாகவும், கண்கள் சிறிதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் : காலித் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள் - அஹ்மத், தப்ரானி.

18:99 வது வசனத்தில் உள்ள ‘அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலை மோத விடுவோம்’ என்ற வாசகப்படி நெருக்கடி ஏற்படும் அளவுக்கு கூட்டமாக இருப்பர் என்பது புரிந்தாலும், அவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள் என்பதும் புரிகிறது.

இதே போல் புகாரீ ஹதீஸ் (எண் 3348) ‘நரகத்தில் நாம் ஒருவர் என்றால் 1000 பேர் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருப்பார்கள்’ என்று கூறுகிறது. இந்த வாசகம் மூலமும் அவர்களின் எண்ணிக்கை கூடுதலானது. அதே வேளையில் உயரமும் குறைவானது என்பதைப்புரியலாம்.

இது போல் ஒரு நபர் ஆயிரம் குழந்தைகளை வாரிசாகப் பெறுவார்’ என்ற வாசகம் மூலம், அவர்களின் பிறப்பின் போதே உயரம் மிகச்சிறியதாக இருக்கும் என்றும் புரியலாம். இவர்களின் உயரம் ஒரு சாண், அல்லது இரு சாண் அளவுக்கே இருக்கும். இவர்களில் மிகவும் உயரமானவர் மூன்று சாண் அளவுக்கு இருப்பார்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 21:96 வது வசனத்தில் உள்ள ‘விரைந்து வருவார்கள்’ என்ற வாசகம் மூலம், அவர்கள் அதிவேகமாக இயங்குவார்கள் என்பதும் விளங்குகிறது.

0 comments:

கருத்துரையிடுக