வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டியடிக்கப்பட்ட புத்தளம் முஸ்லிம்கள் மீண்டும் சொந்த ஊரில் குடியேற ஆலோசனை.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் மீது உலகின் கவனம் குவிந்துள்ள தற்போதைய நிலையில், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வட மாகாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டியடிக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள், தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லுதல் பற்றி நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

கொழும்பின் வடக்கே புத்தளம் நகரில் தங்கியுள்ள இந்த முஸ்லிம் அகதிகள் பலர், இருபதாண்டு காலமாக பலவித இன்னல்களுக்கும் ஆளாகிவந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளால் கடுமையான தாக்குதல்கள் வரலாம் என்ற அச்சம் காரணமாக வட மாகாணத்தில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் அத்தனை பேரும் அங்கிருந்து 1990ஆம் ஆண்டில் வெளியேறியும் விரட்டப்பட்டும் இருந்தனர்.

தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது குறித்து புத்தளத்தில் வாழும் அகதிகள் ஆலோசித்து வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக