வியாழன், 27 ஆகஸ்ட், 2009

திட்டுவிளை விநாயகர் சிலை உடைப்பில் மேலும் ஒருவர் கைது

திட்டுவிளை மார்த்தால் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அப்பகுதி இந்து அமைப்பினர் விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் விநாயகர் சிலையை உடைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்துல்காதர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வந்தனர். இதில் நேற்று இரவு மார்த்தால் பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் ஷேக் முகமது (20) என்பவரை பூதப்பாண்டி போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக