வியாழன், 13 ஆகஸ்ட், 2009
சென்னையில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
சென்னையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள 8 மாடி கட்டடம் அதிர்ந்ததால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இதேபோல் தி.நகர், அடையாறு உள்ளிட்ட பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அந்தமானில் இன்று பிற்பகல் 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் சென்னையிலும் எதிரொலித்தது.
சென்னை வானிலை பூகம்ப கருவியில் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
சென்னையில் இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர
Labels:
சென்னை,
நிலநடுக்கம்
0 comments:
கருத்துரையிடுக