வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

கூகுள் எர்த்க்கு (Google Earth) போட்டியாக இஸ்ரோ வின் புதிய இணையதளம்

கூகுள் எர்த் இணையதளத்தை போல், இந்தியாவின் எந்த இடத்தையும் பார்க்க உதவும் புதிய இணையதளத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கி உள்ளது. இதில் ரோட்டில் நிற்கும் ஒரு காரைக்கூட தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும்.
கூகுள் எர்த் இணையதளம் உலக அளவில் பிரபலமானது. இதில் இந்தியாவில் இருக்கும் ஆண்டிப்பட்டி கிராமத்தில் இருந்து அமெரிக்காவின் நியுயார்க் நகரம் வரையில் எந்த இடத்தையும் தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும். இவை எல்லாம் செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டவை. ஒரு காரின் நம்பர் பிளேட்டை கூட இதில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எதிர்ப்புகள் எழுந்ததால் பாதுகாப்பு பிரச்னைகளுக்காக விண்ணில் இருந்து படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பார்க்க முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டது.
கூகுள் எர்த்துக்கு போட்டியாக இப்போது இந்தியாவின் இஸ்ரோ புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது.http://bhuvan.nrsc.gov.in/ என்ற அந்த இணையதளத்தில் சென்றால், இந்தியாவின் எந்த நிலப்பரப்பையும் தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும். அதன் துல்லிய அளவு, 10 மீட்டர் முதல் 55 மீட்டர் உயரம் வரை. இதன் மூலம் ரோட்டில் உள்ள ஒரு காரை கூட இந்த இணையதளம் மூலம் பார்க்க முடியும்.
ஆனால், தீவிரவாதிகள், தேச துரோகிகளுக்கு உதவிடும் வகையில் இந்த இணையதளம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பு பகுதிகள், ராணுவ சம்பந்தப் பட்ட இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாக பார்க்க முடியாது. இதில் உள்ள காட்சிகள் ஒரு ஆண்டுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் கார்டோசாட் 1, கார்டோசாட் 2 ஆகியவை மூலம் முப்பரி மாணத்தில் படம் பிடிக்கப்பட்டவை.

0 comments:

கருத்துரையிடுக