வியாழன், 20 ஆகஸ்ட், 2009
உலகப் புகழ்பெற்ற ரீடர்ஸ் டைஜெஸ்ட் திவால் ஆகிறது
நியூயார்க்: உலகப் புகழ்பெற்ற ரீடர்ஸ் டைஜெஸ்ட் பத்திரிகை, திவால் நோட்டீசை நீதிமன்றத்தில் பதிவு செய்ய உள்ளது.
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ரீடர்ஸ் டைஜெஸ்ட் சங்கம் சார்பில், இதேபெயரில் பல்வேறு பத்திரிகைகள் வெளியிடப்படுகிறது. 44 நாடுகளில் இதற்கு அலுவலகம் உள்ளது.
புத்தகங்கள், மாத, வார இதழ்கள், இசை, வீடியோ, கல்வி புத்தகங்கள் என்று ஏகப்பட்ட இதழ்களை வெளியிடுகிறது. இவை 78 நாடுகளில் 13 கோடி வாசகர்களை நேரடியாக சென்றடைகிறது. மொத்தம் 90 இதழ்களை இந்நிறுவனம் வெளியிடுகிறது. இதில் 50 இதழ்கள் ரீடர்ஸ் டைஜெஸ்ட் பெயரிலேயே வெளியாகுபவை.
இந்நிறுவனம் இப்போது கடன் சுமையில் தத்தளிக்கிறது. இதையடுத்து கடன் நிறுவனங்களிடம் பேசி திவால் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், அமெரிக்காவை தவிர மற்ற இடங்களில் இந்நிறுவனம் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் திவால் நோட்டீசை பதிவு செய்ய உள்ளது.
இதன் மூலம் நிறுவனத்தின் கடன் சுமை 75 சதவீதம் அளவுக்கு குறையும். மேலும், எதிர்கால திட்டங்களுக்குரிய நிதியை பெற வழி கிடைக்கும். அந்நிறுவனத்துக்கு இப்போதுள்ள ரூ.10,560 கோடி கடன், திவால் நோட்டீஸ் அளிப்பதன் மூலம் ரூ.2,640 கோடியாக குறையும்.
0 comments:
கருத்துரையிடுக