வியாழன், 27 ஆகஸ்ட், 2009
நாகர்கோவிலில் திருவிதாங்கோடு பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
தலைமை ஆசிரியர் மீது புகார் கூறி திருவிதாங் கோடு பள்ளி மாணவர் கள் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருவிதாங்கோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தலைமை ஆசிரியர் மாணவ மாணவி களிடம் தகாத வார்த்தை கள் பேசுவதாகவும், ஆபா சமாக, இரட்டை பொருள் கொண்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களை மாலை 6 மணிக்கு மேலும் பள்ளியில் அமர வைத்து தேர்வு நடத்தியதாகவும் இதனால் நோன்பு திறக்கும் தங்களது நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ‘யுனை டட் ஸ்டுடன்ஸ் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா’ அமைப்பின் மாவட்ட தலைவர் மாகின் தலைமையில் கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் முத்துவை சந்தித்து மனு அளித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மாணவர்கள் சீருடையுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Labels:
திருவிதாங்கோடு,
போராட்டம்
0 comments:
கருத்துரையிடுக