வியாழன், 27 ஆகஸ்ட், 2009
ஐடிஐ படித்தவர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு 28, 29ம் தேதிகளில் நேர்காணல்
சென்னை அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சவூதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு வளைகுடா நாடுகளில் 4வருட பணி அனுபவம் பெற்று ஐடிஐ படித்த எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் தேவைபடுகின்றனர். அதேபோல் ஐடிஐ தகுதி அல்லாத இரண்டு வருட அனுபவம் பெற்ற ஸ்பிரே பெயிண்டர்கள், டைல்ஸ் பொருத்துபவர்கள், மேசன்கள், சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள் மற்றும் பினிசிங் கார்பெண்டர்களும் வளை குடா நாடுகளில் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.
எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் நாகர்கோவில் கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 28, 29ம்தேதிகளில் காலை 9மணி முதல் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம். மேலும் விபரங்கள் அறிய 93818 00181, 9444690026, 044& 24464269 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்
0 comments:
கருத்துரையிடுக