வியாழன், 27 ஆகஸ்ட், 2009
அழிவுப் பாதையில் பாஜக:
வசுந்தரா ராஜே உறுதி எதிர்க்கட்சி தலைவர் பதவி ராஜினாமா செய்யமாட்டேன்
ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே கூறினார். ராஜஸ்தானில் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டது. ஆனால், இதை ஏற்க வசுந்தரா மறுத்துவிட்டார். ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 78பா.ஜ, எம்.எல்.ஏ.க்களில் 70 பேரின் ஆதரவு வசுந்தராவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெய்ப்பூரில் வசுந்தரா கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை கட்சி தலைமையிடம் நான் கொடுத்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையில்லை. நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி, சட்டப்பேரவையில் எப்படி செயல்படுவது என்பது பற்றி ஆலோசித்தேன். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எப்போது கட்டுப்படுவேன். கட்சியின் நலனுக்காக எதையும் செய்வேன். இவ்வாறு வசுந்தரா கூறினார்.
Labels:
அழிவுப் பாதையில் பாஜக,
பாஜக
0 comments:
கருத்துரையிடுக