
வியாழன், 27 ஆகஸ்ட், 2009
பாகிஸ்தானில் புத்தகம் வெளியிட ஜஸ்வந்த் சிங்கிற்கு, பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் அழைப்பு

இந்தியா முழுவதும் கடும் சர்ச்சைக்கு உள்ளான ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்திற்கு பாகிஸ்தானில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் ஹ¨சைன் இன்று செய்தியாளர்களை இஸ்லாமபாத்தில் சந்தித்தார். அப்போது, ஜின்னாவின் உண்மையான வரலாற்றை எடுத்துரைக்கும் புத்தகத்தை பாகிஸ்தானில் வெளியிட வேண்டும் என தெரிவித்தார். இந்த புத்தகம் மூலம் பாகிஸ்தான் மக்கள் பல அரிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஜஸ்வந்த் சிங்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக கூறிய ஹ¨சைன் பாகிஸ்தானில் புத்தகம் வெளியிட ஜஸ்வந்த் சிங்கிற்கு அழைப்பு விடுத்ததாக கூறினார்
Labels:
பாகிஸ்தான்,
பாஜக,
ஜஸ்வந்த்
0 comments:
கருத்துரையிடுக