சனி, 22 ஆகஸ்ட், 2009

தக்கலையில் போலீசை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தக்கலை காவல் நிலையத்தில் வக்கீல்களை தாக்கிய காவலர் கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை தக்கலை காவல் நிலையம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பத்மனாபபுரம் வக்கீல் சங்க அலுவலகத்தில் இருந்து ஏராளமான வக்கீல்கள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் ஜோஸ் பெனடிக்ட் தலைமை வகித்தார். தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் பிளச்சர், பத்மனாபபுரம் வக்கீல் சங்க தலைவர் பாலுபிள்ளை, இரணியல் வக்கீல் சங்க தலைவர் ராபி, குழித்துறை வக்கீல் சங்க தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வக்கீல் சங்க தலைவர் வடிவேல் பூபதி ஆகியோர் பேசினர்.

0 comments:

கருத்துரையிடுக