சனி, 22 ஆகஸ்ட், 2009

பன்றி காய்ச்சல் ரத்த பரிசோதனை : நாகர்கோவில் விவேக் லேபரட்டரீஸ் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி

பன்றி காய்ச்சல் நோய்க்கான பரிசோதனைக்கு நாகர்கோவில் கேபி ரோட்டில் உள்ள விவேக் லேபரட்டரீஸ் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காணப்படுவோரை உடனுக்குடன் பரிசோதித்து அறிய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு கூடத்திற்கு ரத்தம், சளி மாதிரிகளை அனுப்பி சோதனை செய்வதோடு மட்டுமின்றி அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் ஆய்வு கூடங்களிலும் பரிசோதிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சாதாரண ஜலதோஷம் உள்ளவர்கள் எச்1என்1 பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த நோய்க்கு பரிசோதனை செய்ய ஏற்கனவே 5 தனியார் ஆய்வுக் கூடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர லிஸ்டர் மெட்ரோபாலிஸ் லேபரட்டரி, ஜெகநாதன் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் சென் டர் போரூர், இம்யூநோ அன்சிலரி கிளினிக்கல் சர்வீஸ், ஆர்.எஸ்.புரம், கோவை மற்றும் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கேபி ரோட்டில் உள்ள விவேக் லேபரட்டரிஸ் ஆகிய 4 ஆய்வுக் கூடங்களுக்கு புதிதாக அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.
எச்1என்1 நோய் அறிகுறி உள்ளவர்கள் இந்த பரிசோதனைக் கூடங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக