சனி, 22 ஆகஸ்ட், 2009

பன்றிக் காய்ச்சல்: ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்தியர் பலி

ஐக்கிய அரசு எமிரேட்டில் 63 வயதான இந்திய தொழிலதிபர் பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதலால் உயிரிழந்தாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்பாகவே இந்தியத் தொழிலதிபருக்கு கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்றுநோய் இருந்ததாகவும், மிகவும் காலதாமதமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்டில் வசித்த இந்தியத் தொழிலதிபர் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு முதலில் பலியாகியுள்ளதால், அந்நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறும்படி அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக