செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

திட்டுவிளை அருகே விநாயகர் சிலை உடைப்பு

திட்டுவிளை அருகே நள்ளிரவில் விநாயகர் சிலையை உடைத்த கும்பல், அதற்குக் காவலாக இருந்த நான்கு பேரையும் அரிவாளால் வெட்டித் தப்பியது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இச்சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.

இந்நிலையில் திட்டுவிளை அருகே வடக்கு மார்த்தால் என்னும் பகுதியில் நேற்று நள்ளிரவில், ஒரு கும்பல் அங்கு வந்தது.

அங்கு 3 அடி உயர சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. சிலைக்குப் பாதுகாப்பாக, ராஜா செந்தில், ராமச்சந்திரன், நீலகண்டன், ராஜா, கண்ணன், பாலமுருகன் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு இவர்கள் காவல் பணியில் இருந்தனர். அப்போது நள்ளிரவில், போலீஸ் உடையில் 6 பேர் திடீரென வந்தனர். பின்னர் சிலையை உடைத்தனர். இதில் சிலை முழுவதும் உடைந்து போனது.

இதை எதிர்த்து தடுக்க முயன்ற சிலைக் குழுவினர் 6 பேரையும் அக்கும்பல் தாக்கியது. இதில் நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.

வெட்டுக்காயம் அடைந்த 4 பேரும் பூதப்பாண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி. சண்முகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் உடையில் வந்து சிலையை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய செய்தி அறிந்தவர்கள் "comments"-இல் பதிவு செய்யலாம் அல்லது thiravai@mail.com என்ற முகவரியில் அனுப்பி வைக்கலாம்.

0 comments:

கருத்துரையிடுக