புதன், 26 ஆகஸ்ட், 2009

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களின் உடலுறுப்புகளை திருடுகிறது

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களின் உடலுறுப்புகளை அறுவடை செய்வதாக சுவீடன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டது பலஸ்தீனர்களின் முறைப்பாடுகளை ஆதாரமாக வைத்து சுவீடன் பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டது.

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களின் உடலுறுப்புகளை திருடுவதாகவும், துண்டித்து விடுவதாகவும் அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இதை நிராகரித்ததுள்ளது

இதற்குப் பதிலளித்த சுவீடன், பத்திரிகைச் சுதந்திரம் அனைத்து விடயங்களையும் மதிப்பளிக்க வேண்டியுள்ளதாகவும் பிரதிபலிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சுவீடன் பத்திரிகையில் இச் செய்தி வெளியானதுடன் பதட்டமடைந்த இஸ்ரேல் அவசரமாக பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டியது இஸ்ரேல் பிரதமர், இவ்வாறான விடயங்களை எவ்வாறு கையாள வேண்டுமென்பது இஸ்ரேலுக்குத் தெரியும். சுவீடன் அரசாங்கம் இச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை இஸ்ரேல் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக