புதன், 26 ஆகஸ்ட், 2009

'அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சலுக்கு 90,000 பேர் பலியாகலாம்'

எச் 1 என் 1 ஃபுளூ என அழைக்கப்படும் பன்றிக் காய்ச்சலுக்கு, அமெரிக்காவில் சுமார் 90,000 பேர் வரை பலியாக வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் 60 முதல் 120 மில்லியன் அமெரிக்கர்கள் பன்றிக்காய்ச்சல் அறிகுறியை உணர்வார்கள் என்றும், இவர்களில சுமார் 2 மில்லியன் பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்,1,50,000 முதல் 3,00,000 பேர் வரை அவசர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 30,000 முதல் 90,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என்றும், இவர்களில் பெரும்பாலனோர் 50 வயதுக்கும் கீழானவர்களாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் பராக் ஒபாமாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் கவுன்சில் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதே சமயம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் மட்டுமே தவிர நிச்சயம் நடக்கும் என்ற உறுதியாக கூறுவதாக அர்த்தமாகாது என்றும் அந்த அறிக்கையை எழுதிய ஒபாமா ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

--webdunia.com

0 comments:

கருத்துரையிடுக