சனி, 29 ஆகஸ்ட், 2009

ஆஃப்கானிஸ்தானில் பிரிட்டன் பிரதமர்

ஆஃப்கானிஸ்தானின் தென்பகுதியில் இருக்கின்ற பிரிட்டிஷ் துருப்புகளை பிரதமர் கார்டன் பிரவுண் சந்தித்துள்ளார். இந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு பிரிட்டிஷ் பிரதமர் மேற்கொண்டுள்ள நான்காவது விஜயம் இதுவாகும்.

எந்தவித அறிவிப்புமின்றி இடம்பெற்றுள்ள இந்த விஜயத்தில், சாலையோரக் குண்டுத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக இன்னும் அதிக கவசம் கொண்ட புதிய வாகனங்கள் கொடுக்கப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் கூறினார்.

சமீப வாரங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பிரிட்டிஷ் படையினர் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. இதனை அடுத்து பிரிட்டிஷ் படையினர் பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்து பிரிட்டனில் கவலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு பிரிட்டிஷ் படையினர் நாடு திரும்ப வேண்டும் என கூறும் பொதுமக்களின் குரலும் அதிகரித்துள்ளது.


0 comments:

கருத்துரையிடுக