வடகொரியாவிலிருந்து இரானுக்கு ஆயுதங்கள் சுமந்து சென்றது என்று தெரிவிக்கப்படும் கப்பல் ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்டுகள் பிடித்துள்ள நிலையில், அக்கப்பல் பற்றிய மேலதிக விபரங்களைத் திறட்டும் முயற்சியில் ராஜிய அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
சில வாரங்கள் முன்பு ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இந்தக் கப்பலைக் முற்றுகையிட்டுப் பிடித்திருந்தது என்றும் அதிலிருந்த சரக்குகள் ஐ.நா.தண்டனைத் தடைகளை மீறுவதாக இருந்தது என்றும் ஆனால் ஏமாற்றும் விதமாக சரக்குகளுக்கு மாற்றுப் பெயர்கள் ஒட்டப்பட்டிருந்தன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் சரக்குகள் தொடர்பில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி, ஐ.நா. பாதுகாப்பு சபை இரானிய மற்றும் வடகொரிய அரசாங்கங்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக