வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

சவுதி இளவரசர் மீது மனித வெடிகுண்டு தாக்குதல்

சவுதி அரேபியாவின் இளவரசரும் அந்நாட்டு உள்துறை இணை அமைச்சருமான முகமது இபின் நையப் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சவுதி அரேபிய மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் முகமது இபின் நையப். தற்போது அந்நாட்டு உள்துறை இணை அமைச்சராக இருக்கிறார். மேலும், அந்நாட்டில் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு தலைமையேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர் ஜெட்டா நகரில் ரமலான் நோன்பு விழாவுக்கு வந்த விருந்தினர்களை வரவேற்று கொணடிருந்தார். அப்போது தேடப்பட்டு வரும் தீவிரவாதி ஒருவன் நையப்பை நோக்கி வந்தான்.

அவன் நையப்புக்கு அருகில் வந்ததும் தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவத்தில் நையப் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த தீவிரவாதி உடல் சிதறி பலியானான்.

0 comments:

கருத்துரையிடுக