வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
அழிவுப் பாதையில் பாஜக:
ஜஸ்வந்த்சிங் நீக்கத்துக்கு யஷ்வந்த் சின்கா கண்டனம்
பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜஸ்வந்த்சிங், ஜின்னாவை பற்றி கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும், அவர் ஜின்னாவை பற்றி புத்தகம் எழுதியது, ஒழுங்கு நடவடிக்கைக்கு உரிய விஷயம் அல்ல. ஜஸ்வந்த்சிங் கருத்துகளை கட்சித்தலைவர் நிராகரித்து விட்டார். அதுவே போதுமானது.
ஆனால், 30 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் ஜஸ்வந்த்சிங்கை ஒரு விளக்க நோட்டீசு கூட கொடுக்காமல் நீக்கி விட்டனர். அவரிடம் அநியாயமாக நடந்து கொண்டுள்ளனர். வாஜ்பாய் தலைவராக இருந்திருந்தால், இப்பிரச்சினை வேறுமாதிரி கையாளப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
Labels:
அழிவுப் பாதையில் பாஜக,
ஜஸ்வந்த்
0 comments:
கருத்துரையிடுக