திருவிதாங்கோடு தக்கலை பகுதிகளில் கடந்த சுமார் இரண்டு மாதமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.. நேற்று இரவு திருவிதாங்கோடு துரப்பு அருகே திருடன் என சந்தேகிக்கப்பட்ட ஒருவர் பொது மக்கள் பிடிக்கும் முன்னர் தப்பி ஓடி விட்டார். கடந்தவாரம் கேரளபுரத்தில் கணேஷ் எனபவரது வீட்டிலும், தக்கலை பெருமாள் தெருவை சார்ந்த சுரேஷ் என்பவர் வீட்டிலும் பகல் வேளையில் திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது, தக்கலை பஸ் ஸ்டாண்ட் முன் ராஜா ஸ்ரீதரன் என்பவர் கடையின் ஓடை பிரித்து செல்போன் ரிச்சார்ஜ் கூப்பன்கள் திருடப்பட்டுள்ளது. இச்சம்பவங்களால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக