வியாழன், 27 ஆகஸ்ட், 2009

அழிவுப் பாதையில் பாஜக:
கந்தூரி போராட்டம் வலுக்குகிறது

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் கந்தூரி, முதல்வர் பதவியிலிருந்து அதிரடியாக மே மாதம் நீக்கப்பட்டார். இந்நிலையில் கந்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் என்னை யாரும் குற்றம் சொல்ல முடியாது என கூறினார். மேலும், தனக்கு போதுமான ஆதரவு இருப்பதாகவும், தான் நீக்கப்பட்டதற்குக்கான காரணம் பா.ஜ.க அவசியம் கூற வேண்டும் என கூறினார். மேலும் பா,ஜ.க கட்சி தன்னை பலிக் கடா ஆக்கிவிட்டதாக கந்தூரி கூறினார். மேலும் தான் பலமுறை கடிதம் அனுப்பியும், பா.ஜ.க இதுவரை எந்த பதிலும் தரவில்லை என்று கந்தூரி கூறினார். இந்நிலையில் கந்தூரி ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக