புதன், 26 ஆகஸ்ட், 2009

பைதுல்லா மசூத் இறந்தது உண்மைதான்: பாகிஸ்தான் தாலிபான்

அமெரிக்கப் படைகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில், பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் இயக்கத் தலைவர் பைதுல்லா மசூத் உயிரிழந்தது உண்மைதான் என தாலிபான்கள் நேற்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஹக்கிமுல்லா மசூத் மற்றும் முக்கிய தளபதியான வலியூர் ரெஹ்மான் ஆகியோர் பி.பி.சி. நிறுவனத்திற்கு அளித்த செய்தியில் பைதுல்லா மசூத் உயிரிழந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்கப் படைகளின் எறிகணைத் தாக்குதலில் பைதுல்லா படுகாயம் அடைந்தாலும், 9ஆம் தேதிதான் (ஞாயிறு) அவர் உயிரிழந்தார் என்றும் ஹக்கிமுல்லா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் புதிய தலைவர் ஹக்கிமுல்லாவுக்கும் தனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை எனத் தெரிவித்த வலியூர் ரெஹ்மான், அவருக்கு (ஹக்கிமுல்லா) தாம் முழு ஆதரவு அளித்து வருவதாக கூறியுள்ளார்.
-webdunia.com

0 comments:

கருத்துரையிடுக