புதன், 26 ஆகஸ்ட், 2009
ஆப்கானிஸ்தானில் 5 கார்குண்டு தாக்குதல்: 41 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரான கந்தஹாரில் இரவு நேரத்தில் ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட் 5 கார் குண்டு தாக்குதல்களில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் மிகக் கடுமையாக இருந்ததாகவும், குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் இருந்து பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என காவல்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். இத்தாக்குதலில் குறைந்தது 66 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கந்தஹாரில் இயங்கி வந்த ஜப்பானிய கட்டுமான நிறுவனத்தைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த ஆப்கானிஸ்தான் அதிகாரிகள், சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் நிறுவனத் தலைமையகம் மட்டுமின்றி, அருகில் இருந்த திருமண மண்டபமும் இடிந்ததாக சம்பவ இடத்தில் இருந்த தனியார் செய்தி நிறுவனப் பணியாளர் தெரிவித்துள்ளார்.
Labels:
ஆப்கானிஸ்தான்,
குண்டு வெடிப்பு,
செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக