ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009
துபாயில் ரோபோட்டிக் ( Robotic) கார் பார்கிங்
பல அடுக்கு தானியங்கி வசதியுடன் கூடிய ரோபோடிக் பார்கிங் வசதி கடந்த 12-ம தியதி துபாயில் அறிமுகபடுத்தப்பட்டது. இதில் 765 வாகனங்கள் ஒரே நேரத்தில் பார்க் செய்ய முடியும், ஷேக் சாயித் ரோட்டில் இப்னு பதுத்தா மாலின் அடுத்துள்ள அலுவலக காம்ப்ளக்சில் இந்த வசதி செய்யபட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தும் வாகன உரிமையார்களுக்கு ஒரு கார்டு வழங்கப்படும், இந்த கார்டினை நுழைவாயில் இருக்கும் மெசினில் வைத்தல் பார்க் செய்யும் வசதியுடன் கூடிய இரும்பு சீட்டு ஒன்று வெளியில் வரும். அங்கே வாகனத்தை நிறுத்துவதுடன் வாகன உரிமையாளரின் வேலை முடிந்து விடும். பின்னர் அதுவே காலியான இடத்தில வாகனத்தை கொண்டு சேர்த்து விடும். வாகனத்தை திரும்ப பெற அந்த கார்டை மெசினில் வைத்தால் போதும். கார் தானாகவே வெளியே வந்துவிடும். மத்திய கிழக்கு நாடுகளில் இத்தகைய வசதி இதுவே முதல் முறையாகும்.
Labels:
கார் பார்கிங்,
துபாய்
0 comments:
கருத்துரையிடுக