திங்கள், 17 ஆகஸ்ட், 2009
UAE- ல் நோன்பு திறப்பதற்காக ரெட் கிரசென்ட் 80 இப்தார் டெண்டுகள் திறக்க ஏற்பாடு
புனித ரமலானில் நோன்பு திறப்பதற்காக நாட்டில் வெவ்வேறு பகுதகளில் 80௦ டெண்டுகள் திறக்கப்படும் என்று ரெட் கிரசென்ட் பொறுப்பாளர் அறிவித்தார். தினமும் 12000 உணவு பொட்டலங்கள் இந்த டெண்டுகள் வழியாக விநியோகம் செய்யப்படும். ஒரு டெண்டில் 150 முதல் 200 பேர் வரை அமர்ந்து நோன்பு திறக்கலாம். அபுதாபியில் மட்டும் 23 டெண்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரெட் கிரசென்ட் பொறுப்பாளர் மேலும் அறிவித்தார். மேலும் 60 நாடுகளில் உணவு மற்றும் துணிமணி வழங்குதல், அனாதைகள், விதவைகள், மற்றும் ஏழை குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகள் முதலியவை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்
0 comments:
கருத்துரையிடுக