
சனி, 5 செப்டம்பர், 2009
மும்பையில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

மும்பையில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் புறநகர்ப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
இந்த துயரச் சம்பவம் அந்தேரியில் சாகிநாகா பகுதியில் உள்ள எல்பிஎஸ் நகரில் வியாழக்கிழமை இரவு நடந்தது.
கன மழை காரணமாக நிலச் சரிவு ஏற்பட்டது. இதில் 15 முதல் 20 வீடுகள் பலத்த சேதமடைந்தன. 25-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டனர். இந்தத் தகவலை கூடுதல் போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தெரிவித்தார். காயமடைந்தவர்கள் ராஜவாடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக