ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

குமரி சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு 120 இடங்களில் அதிரடி சோதனை 40 கிலோ கலப்படதேயிலை பறிமுதல்


குமரி மாவட்டம் முழு வதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 40 கிலோ கலப்பட தேயிலை யை பறிமுதல் செய்தனர்.
தேயிலையில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாகவும், தரம் குறைந்த, ஏற்கனவே உபயோகித்த தேயிலை பவுடருடன் புதிய தேயிலையும் கலந்து விற்பனை செய் வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், தேயிலையுடன் முந்திரி தோடு, புளி விதை தோடு போன்றவற்றின் பொடிகளை கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்து ள்ளன. டீயில் டிக்காஷன் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறு ஓட்டல்களில் இது போன்ற கலப்பட தேயிலை கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்றும் சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தி கலப்பட தேயிலை மற்றும் அது சார்ந்த பொருட்களை பறிமுதல் செய்ய சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப் போது கலப்பட தேயிலை, காலாவதியான தேயிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் உத்தரவின் பேரில் உணவு ஆய்வாளர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகி யோர் அடங்கிய குழுவினர் நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி, கருங்கல் முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். உணவு ஆய்வாளர்கள் சூரிய நாராயணன், அஜய், அருணாசலம், ராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகதேவர், சுகாதார பணி கள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்நல அலுவலர் டாக்டர் போஸ்கோ ராஜா தலைமையில் அதிகாரிகள் குழு தேயிலை பாக்கெட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், டீக்
கடைகள், ஓட்டல்கள் போன்றவற்றில் சோதனை நடத்தியது. அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த பொருட்களின் மாதிரிகளும் எடுக்கப்பட்டது. காலாவதியான தேயிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்டத்தில் கலப்பட தேயிலை தயார் செய்யப்படுகின்ற குடோன்கள் செயல்படுகிறதா? கலப்பட தேயிலைகள் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் சுசீந்திரம், காப்புகாடு, புதுக்கடை, பைங்குளம், நித்திரவிளை, அம்சி, முன்சிறை, வெள்ளிச்சந்தை, குருந்தன்கோடு, வில்லுக்குறி, காரங்காடு, நாகர்கோவில், ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், கன்னியாகுமரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள 120 கடைகளில் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர்.
இதில் 9 இடங்களில் இருந்து தேயிலை மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கலப்பட தேயிலை என்று சந்தேகிக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 40 கிலோ தேயிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக