புதன், 9 செப்டம்பர், 2009
தென் அமெரிக்காவில் புயல் 17 பேர் சாவு
தென் அமெரிக்காவில் உள்ள கடல் பகுதியில் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது கடும் புயலாக மாறியது. இதனால் அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் பராகுவே நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
அங்கு வீசும் சூறாவளி காற்று மற்றும் மழை வெள்ளத்துக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
அர்ஜென்டினாவில் 10 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் குரேஷியாபா நகரில் 4 பேர் இறந்துள்ளனர். இவர்கள் தவிர சாபாலோ நகரில் மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
பராகுவே நாட்டில் கடும் புயல் வீசுகிறது. இதற்கு “டொர்னாடோ” என பெயரிடப்பட்டுள்ளன. அர்ஜென்டினாவில் தான் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள சாந்தா ரோசா, தொபுனா, போஷா சுல்சான் பெட்ரோ உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இப்பகுதிகளுக்கு அந்நாட்டு மந்திரி ஜீவான் மன்சூர் நேரில் சென்றுள்ளார்.
பிரேசில் நாட்டில் சான் பாலே நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் டெலிபோன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பராகுவேயில் 700-க்கும் மேற்பட்டோர் தங்கள் சொத்துக்களை இழந்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக