புதன், 9 செப்டம்பர், 2009

புஷ் மீது ஷூ வீசிய இராக் நிருபருக்கு கார், வீடு, பணம் தர போட்டா போட்டி

கடந்த ஆண்டு டிசம்பரில் பாக்தாதில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூக்களை வீசி பிரபலமடைந்த இராக் நாட்டு பத்திரிகை நிருபர் முன்டாசர் அல் ஜெய்திக்கு கார், வீடு, பணம் என பல்வேறு பரிசுப் பொருள்களை தரத் தயார் என்று ஏராளமானவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
புஷ் மீது ஷூ வீசிய குற்றத்துக்காக அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இராக் நீதிமன்றம் ஒன்று 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதிபர் பொதுமன்னிப்பு வழங்கியதால் அவர் அடுத்த திங்கள்கிழமை விடுதலை ஆகிறார்.
இந்நிலையில், ஏராளமானோர் அவருக்கு வெகுமதி தருவதற்காக காத்திருக்கின்றனர். இத்தகவலை 'தி கார்டியன்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக