சனி, 12 செப்டம்பர், 2009
இதுவரை 281 விமானங்கள் ரத்து... 5 வது நாளாக தொடரும் விமானிகள் ஸ்ட்ரைக்!
சென்னை: ஜெட் ஏர்வேஸ் விமானிகள் - நிர்வாகம் நடத்திய முதல் சுற்றுப் பேச்சுகள் நேற்று தோவல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இன்றும் 5வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது.இதுவரை 281 விமானங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. டிக்கெட் புக்கிங்குகள் மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டன. பணிநீக்கம் செய்யப்பட்ட 4 ஜெட் ஏர்வேஸ் விமானிகளை மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக நாடு முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமான போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
விமானிகளுடன் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது. இதனால் 5 வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் நீடிக்கிறது.இதனால் சென்னை யில் இருந்து பெங்களூர் , மும்பை , டெல்லி செல்லும் 6 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதிப்பட்டார்கள்.'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்துக்கு மொத்தம் 380 விமானங்கள் உள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவையில் இவை ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 25 வெளிநாட்டு விமானங்கள் உள்பட 281 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுவிட்டன.
0 comments:
கருத்துரையிடுக