
புதன், 2 செப்டம்பர், 2009
முதல் மற்றும் 3ம் திங்கட்கிழமைகளில் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி செப். 7-ல் தொடங்குகிறது

எஸ்.பி. அலுவலகத்தில் மக் கள் குறை கேட்பு நிகழ்ச்சி வரும் 7-ந்தேதி தொடங்குகிறது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடப் பது போல், மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களி லும் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண் டும் என சட்டசபையில் கோரிக்கை எழுப்பப்பட் டது. இதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் கருணாநிதி, உடனடியாக இதை அமுல்படுத்தவும் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையில் மாதம்தோறும் முதல் மற்றும் மூன்றாவது திங்கட்கிழமைகளில் பொது மக்களிடம் குறைகேட்கும் நாள் கடைப்பிடிக்கப்படும். அந்நாளில், அந்தந்த மாநகர காவல் ஆணையாளர்கள் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் தலைமையிடத்தில் தங்கி, பொதுமக்களைச் சந்தித்து, அவர்கள் அளிக்கும் மனுக்களைப் பெற வேண்டும். அவர்களுக்கு ஒப்புகைக் கடிதம் வழங்கி, குறைகளை உடனடியாகக் களைவதற்காக விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த குறைகேட்கும் நாள் திட்டம் செப்டம்பர் முதல் நடைமுறைப்படுத்தவேண் டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செப்டம்பர் முதல் திங்கட்கிழமையான வருகிற 7-ம்தேதி மாவட்டம் முழு வதும் எஸ்.பி. அலுவலகங்களில் மக்கள் குறை கேட்பு முகாம் நடக்க இருக்கிறது.
குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் நாகர்கோவில் மணிமேடை அருகே உள்ளது. காலை 10 மணிக்கு இந்த முகாம் தொடங்குகிறது. எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த முகா மில் எஸ்.பி. சண்முகவேல் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். ஏ.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., கன்னியாகுமரி, தக்கலை, நாகர்கோவில் டி.எஸ்.பி.க்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும். மோசடி தொடர் பான வழக்குகள் மத்திய குற்றப்பிரிவுக்கும், பொரு ளாதார குற்றப்பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்கள் அளித்ததற்கான ரசீதும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும்.
0 comments:
கருத்துரையிடுக