சனி, 5 செப்டம்பர், 2009

ஒரே பிரசவத்தில், மும்பை பெண்ணுக்கு 5 ஆண் குழந்தைகள்

மும்பையை அடுத்த மிரா ரோடு பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி உபெத் என்பவரின் மனைவி சபீரா கான். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான சபீரா கான் பிரசவத்துக்காக மும்பை அந்தேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு ஆபரேஷன் மூலம் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள் பிறந்தன. நாட்டிலேயே ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள் வெற்றிகரமாக பிறந்து, உயிர் வாழ்வது இதுவே முதல் முறை ஆகும்.

ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்ததில் சபீரா கானுக்கு மகிழ்ச்சி தான். இருப்பினும் ஒன்று கூட பெண் குழந்தை இல்லையே என்று லேசான வருத்தமும் உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக