சனி, 5 செப்டம்பர், 2009

சேது சமுத்திர திட்டத்தை செல்லாததாகஅறிவிக்க கோரி சுப்ரமணிய சாமி மனு

"சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செல்லாதது என, அறிவிக்க வேண்டும்' என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.கோவாவில் உள்ள தேசிய கடல் ஆய்வியல் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித் துள்ளது. அதனடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டில், சாமி தாக்கல் செய்துள்ள மனு விவரம்:சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை துவக்கும் முன்னர், முறையான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், அந்தத் திட்டத்தை செல்லாதது என, அறிவிக்க வேண்டும்.


புதிதாக ஆய்வு மேற்கொண்டு, அதன்பின் திட்டத்தை துவக்க வேண்டும்.தேசிய கடல் ஆய்வியல் நிறுவனம், சேது சமுத்திர திட்டம் தொடர்பாக, சில ஆய்வுகளை மேற் கொண்டுள்ளது. மேலும் பல ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நான் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அதை உடனடியாக விசாரிக்க முடியாது என, தெரிவித்ததோடு, அக்டோபர் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரும்படி, அதைப் பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே சேது சமுத்திர திட்டம் தொடர் பாக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், டாக்டர் ஆர்.கே.பச்சவுரி தலைமையில், நிபுணர் குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். அந்தக் குழுவின் அறிக்கைக்காக, சுப்ரீம் கோர்ட் காத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக