திங்கள், 7 செப்டம்பர், 2009

ஒரே நாளில் 5 அமெரிக்க வங்கிகள் திவால்

நிதி நெருக்கடியின் தொடர்ச்சியாக கடந்த 4ம் தேதி ஒரே நாளில் அமெரிக்காவில் 5 வங்கிகள் மூடப்பட்டன.
இவற்றுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை மூடப்பட்ட வங்கிகள் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது. நிதி நெருக்கடி உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டில் 25 வங்கிகளே திவாலாகி இருந்தன.
வங்கிகள், நிதி நிறுவனங்களை நெருக்கடியில் இருந்து மீட்க பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம் (எப்.டி.ஐ.சி.) முயற்சித்து வருகிறது. எனினும், பல வங்கிகள், கடன்கள் வசூலாகாமல் வர்த்தகம் முடங்கி மூடப்படுவது தொடர்கிறது.
பர்ஸ்ட் பாங்க் ஆப் கான்சாஸ், இன்பாங்க், வான்டஸ் பாங்க், பிளாட்டினம் கம்யூனிடி பாங்க், பர்ஸ்ட் ஸ்டேட் பாங்க் ஆகியவை 4ம் தேதி திவாலாகின.

0 comments:

கருத்துரையிடுக