திங்கள், 7 செப்டம்பர், 2009
மோடி அரசுக்கு விருது வழங்கக்கூடாது:அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தல்
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் FDI(Foreing Direct Investement) என்ற பத்திரிகை இந்த ஆண்டிற்கான Asian Personality Award என்ற விருதை குஜராத் மாநில முதல்வராக இருக்கும் நரேந்திர மோடிக்கு வழங்கப்போவதாக அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானவுடன் கொதித்துப்போன மனித உரிமை அமைப்புகள் FDI பத்திரிகைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு 2002 ஆம் ஆண்டு 20 ஆயிரம் முஸ்லிம்களை நரபலிக்கொடுத்த நரேந்திரமோடிக்கு இந்த விருதை வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பை போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தினர்.மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பைத்தொடர்ந்து விருது அறிவிப்பில் திருத்தம் செய்த FDI பத்திரிகை இவ்விருதை குஜராத் மாநில அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் FDI யின் இந்த அறிவிப்பை வரவேற்ற அதே வேளையில் குஜராத் அரசிற்கு FDI விருது வழங்க தீர்மானித்துள்ளதை திரும்பபெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
1 comments:
நர பலி மோடிக்கு விருது என்பது தேவை இல்லாதது, அவன் விருது மறுமையில் இறைவன் கையால் கொடுக்கப்படும்.
கருத்துரையிடுக