மத்திய டில்லியின் பகுதியில் டில்லியின் முனிசிபல் கட்டிடம் மற்றும் ஆஸ்பத்திரி உள்பட ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக டெலிபோனில் மர்ம குரல் ஒலித்ததால் நகர் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. குண்டு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இடங்களில் போலீசார் கடும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய டில்லியில் உள்ள போலீசாருக்கு மர்ம டெலிபோன் வந்தது. இதில் பேசிய ஒருவர் டில்லியில் உள்ள என்.டி.எம். சி., கட்டடம் மற்றும் சாப்டர்ஜங் மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் , விகாஸ் மினார் உள்ளிட்ட ஐந்து இடங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. இது சிறிது நேரத்தில் வெடிக்கும் என பேசினார். இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நோயாளிகள் வெளியேற்றம் : உஷார் அடைந்த போலீசார் மேற்கூறிய 5 இடங்களுக்கும் போலீசார் பகுதி, பகுதியாக பிரிந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும், போலீசார் மோப்பநாய் படையினர் விரைந்து சென்றனர். அங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாப்டர்ஜங் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது
0 comments:
கருத்துரையிடுக