செவ்வாய், 8 செப்டம்பர், 2009
குஜராத் போலி என்கவுன்டர்:
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க கோரிக்கை
2004ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான்கு பேரும் லஷ்கர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என போலீஸ் கூறியிருந்தது. ஆனால், நேற்று இந்த வழக்கில், ஆமதாபாத் மெட்ரோபாலிட்டன் கோர்ட் இஸ்ரத் உட்பட நான்கு பேர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக தீர்ப்பளித்தது. போலி என்கவுன்டரில் பலியான கல்லூரி மாணவி இஸ்ரத் ஜஹானின் குடும்பத்தார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்சகட்ட தண்டனை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து என்கவுன்டரை நடத்திய போலீசாருக்கு உச்சகட்ட தண்டனை அளிக்க வேண்டும், என இஸ்ரத்தின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Labels:
குஜராத்,
போலி என்கவுன்டர்
0 comments:
கருத்துரையிடுக