திங்கள், 14 செப்டம்பர், 2009
இந்தியப் பொருளாதாரம் 6 மாதத்தில் சீரடையும் - மான்டேக்
நாட்டின் பொருளாதாரம் விரைவில் ஸ்திரத்தன்மையை எட்டும் என்றும், உலக சந்தையில் பொருளாதார நிலை இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருப்பதால், இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுக்கு ஏற்ற நிலை உருவாகும் என்று திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியிருக்கிறார்.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வருவாய் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடு வரத்துக்கான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்த சில மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.
இந்தியப் பொருளாதாரம் பொருளாதாரம் காலூன்றி இருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறிய அவர், அடுத்த 6 மாதங்களில்
நிலையான பொருளாதார நிலையை அடைய முடியும் என்றார்.
முன்னதாக இம்மாத தொடக்கத்தில் திட்டக்குழு கணிப்பின்படி, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 விழுக்காடாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த வளர்ச்சி விகிதமானது வறட்சி காரணமாக 5.5 விழுக்காடாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி வருவதாக மக்கள் அங்கீகாரம் வழங்குவார்கள் என்று மான்டேக் நம்பிக்கை தெரிவித்தார்.
Labels:
இந்தியா,
பொருளாதாரம்
0 comments:
கருத்துரையிடுக