திங்கள், 14 செப்டம்பர், 2009
இந்திய போலீசார் மனிதநேயமற்றவர்கள்-ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு
“இந்தியப் போலிசார் சட்டவிரோத கொலைகள் மற்றும் ஏதேச்சாதிகார கைதுகள் உள்ளிட்ட பரவலான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்” – ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு
குற்ற ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தியப் போலிசார் சித்திரவதை, தாக்குதல் மற்றும் வேறு வழிவகைகளைப் பயன்படுத்துவதாக இந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவது மிகக்குறைவே எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய போலிஸ் படை பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பின்னர் சிறிதளவே மாற்றம் பெற்றுள்ளதாகவும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கே களங்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு இந்திய அரசாங்கம் பொலிஸ் படையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக